2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: டிசம்பர் 01

Janu   / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1768 – அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.

1822 – முதலாம் பீட்டர் பிரேஸிலின் பேரரசராக முடிசூடினார்.

1834 – தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது.

1913 – தெற்கு அரைக்கோளத்தின் முதலாவது சுரங்கத் தொடருந்துச் சேவை பிரேஸிலின் புவெனஸ் ஐரிஸ் நகரில் ஆரம்பமாகியது.

1913 – முதலாவது பால்கான் போரை அடுத்து துருக்கியிடம் இருந்து சுயாட்சி உரிமை பெற்ற கிரீட் கிரேக்கத்துடன் இணைந்தது.

1918 – திரான்சில்வேனியா உருமேனியாவுடன் இணைந்தது.

1918 – ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.

1918 – சேர்பிய, குரொவாசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசிலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.

1924 – எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசர் இறோகித்தோ அமெரிக்காவுடனான போரை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்தார்.

1958 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரெஞ்சு ஒன்றியத்தினுல் சுயாட்சி பெற்றது.

1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் உயிரிழந்தனர்.

1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1961 – இந்தோனேசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.

1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.

1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

1971 – கெமர் ரூச் போராளிகள் கம்போடிய அரசு நிலைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.

1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.

1973 – பப்புவா நியூ கினி ஆத்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.

1974 – அமெரிக்காவின் வர்ஜீனியாவில் போயிங் 727 வானூர்தி வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.

1988 – உலக எயிட்ஸ் நாள் ஐக்கிய நாடுகளினால் அறிவிக்கப்பட்டது.

1989 – பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு செருமனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.

1991 – பனிப்போர்: உக்ரைன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.

1997 – இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ரன்வீர் சேனா அமைப்பினர் கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்குள்ள இலக்சுமன்பூர்-பதி என்ற ஊரைத் தாக்கி 63 தலித்துகளைக் கொன்றனர்.

2006 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமின்றி உயிர்த் தப்பினார்.

2020- இலங்கையில் மஹர சிறைச்சாலையில் மோதல். 11 கைதிகள் பலி. 117 பேர் காயம். முக்கிய ஆவணங்கள் தீக்கிரை.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .