2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 27

Janu   / 2024 ஜூலை 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1214: பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.

1549: பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.

1627: தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.

1789: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.

1794: பிரெஞ்சுப் புரட்சி - புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரை தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

1862: சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பனாமா நோக்கிச் சென்றுகொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.

1865: வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.

1880: இரண்டாவது ஆங்கில - ஆப்கானியப் போர் - மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.

1921: பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

1929: மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

1941: ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.

1953 :கொரிய யுத்தம் முடிவடைந்தது.

1975: விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1976: ஜப்பானிய பிரதமர் ககுவேய் டனாகா, வெளிநாட்டு நாணயமாற்று சட்டத்தை மீறினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதானார்.

1983: வெலிக்கடை சிறையில் 18 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இரு நாட்களில் இரண்டாவது தடவையாக இத்தகைய சம்பவம் நடைபெற்றது.

1990: பெலாரஸ் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1990: திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.

1997: அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2002: உக்ரேனில் இடம்பெற்ற விமான சகாசத்தின்போது விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 85 பேர் பலி.

2007: பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

2015: இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உயிரிழந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X