Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூலை 18 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1925 : ஹிட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது.
1942 : ஜேர்மனி மெசேர்ஸ்கிமிட் எம், 262 வானூர்தியை சோதனைக்காகப் பறக்கவிட்டது.
1942 : இரண்டாம் உலகப் போர் – நோர்வேயில், யுகொஸ்லாவியப் போர் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 : இரண்டாம் உலகப் போர் - போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர், தெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
1966 : மனித விண்வெளிப்பறப்பு -நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.
1968 : இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.
1976 : 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
1977 : வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1982 : குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர் இராணுவத்தாரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 : கலிபோர்னியாவில் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தானர்.
1994 : அர்கெந்தீனாவில் புவெனசு ஐரிஸ் நகரில் யூத சமூக மய்யம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.
1994 : ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
1995 : கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன், மண்டலத்தின் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
1996 : ஓயாத அலைகள் ஒன்று - முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1,200 படையினர் கொல்லப்பட்டனர்.
1997 : மும்பையில் 10 சிறுவர்கள் பொலிஸாரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8,000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
2007 : மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
2012 : பல்காரியாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 32 பேர் காயமடைந்தனர்.
2013 : அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, 20 பில்லியன் கடனுடன், திவாலா நிலையை அடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
5 hours ago