Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 13 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1643 - இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் - இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள், சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
1793: பிரெஞ்சு எழுத்தாளரும் புரட்சிவாதியுமான ஜோன் போல் மராட், அவரது குளியல் அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
1844: இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
1869: இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
1908: லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.
1878: பெர்லின் உடன்படிக்கை - சேர்பியாஇ மொண்டெனேகுரோஇ ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.
1923: லாஸ் ஏஞ்சலீசில் nஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் 'ஹாலிவூட் குறியீடு' அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது 'ஹாலிவூட்லாந்து' என எழுதப்பட்டாலும் பின்னர் 1949இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
1930: முதலாவது உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
1931: காஷ்மீர்இ ஸ்ரீநகரில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 75பேர் கொல்லப்பட்டனர்.
1941: இரண்டாம் உலகப் போர் - மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1971: மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
1977 - மின்சார இழப்பினால் நியூ யோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1989: இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம், மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1997: சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
2001: சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
2005: பாகிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று ரயில்கள் மோதியதில் 150பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
7 hours ago