Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூலை 05 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : இரண்டாம் பூவர் போர் - பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.
1915 : டென்மார்க்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1916 : முதலாம் உலகப் போர் - உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.
1942 : இரண்டாம் உலகப் போர் – பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.
1944 : இரண்டாம் உலகப் போர் - நார்மாண்டி படையிறக்கம் ஆரம்பம் - ஆயிரத்திற்கும் அதிகமான பிரித்தானியக் குண்டுவீச்சு விமானங்கள் ஜேர்மனியின் அத்திலாந்திக் சுவர் மீது 5,000 தொன் குண்டுகளை வீசின.
1946 : சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.
1959 : சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
1963 : அயொத்தொல்லா ரூகொல்லா கொமெய்னியை ஈரான் அரசுத்தலைவர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கைது செய்ததை அடுத்து ஈரானில் கலவரம் வெடித்தது.
1967 : ஆறு நாள் போர் ஆரம்பம் - இஸ்ரேலிய வான் படையினர் எகிப்தின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1968 : ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர், இராபர்ட் எஃப் கென்னடி பாலத்தீனர் ஒருவனால் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
1969 : அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
1974 : ஈழப்போர் - சிவகுமாரன் உரும்பிராயில் காவற்றுறையினர் சுற்றி வளைத்த போது, சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
1979 : இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.
1981 : லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஐந்து பேர் மிக அரிதான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது. இதுவே எயிட்சுக்கான முதலாவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.
1984 : புளூஸ்டார் நடவடிக்கை - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995 : போசு - ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
1997 : காங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
2000 : காங்கோவில் உகாண்டா, ருவாண்டா படையினரிடையே ஆறு நாள் போர் ஆரம்பமானது. கிசாங்கனி நகரின் பெரும் பகுதி அழிந்தது.
2004 : பிரான்சில் முதன் முதலாக ஒருபால் திருமணம் இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.
2006 : செர்பியா செர்பிடா - மொண்டெனேகுரோவிடம் இருந்து விடுதலை பெற்றது.
2009 : பெருவில் 65 நாட்கள் கலவரங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
2015 : மலேசியாவின் சபா மாநிலத்தில் 6.0 அளவி நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
2017 : மொண்டெனேகுரோ நேட்டோ அமைப்பில் 29 ஆவது உறுப்பினராக இணைந்து கொண்டது.
2017 : பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றஞ்சாட்டி ஆறு அரபு நாடுகள் — பகுரைன், எகிப்து, லிபியா, சவூதி அரேபியா, யேமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் —கட்டாருடனான உறவைத் துண்டித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago