Janu / 2023 ஜூன் 09 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.
1903 : அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு, மதகுரு தாக்கப்பட்டார்.
1923 : பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928 : ஆத்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் முதல் தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.
1935 : வடமேற்கு சீனாவில் சப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.
1944 : இரண்டாம் உலகப் போர் - பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் ஜேர்மனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 : இரண்டாம் உலகப் போர் - பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.
1946 : பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1953 : அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.
1959 : முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1962 : தங்கனீக்கா குடியரசாகியது.
1967 : ஆறு நாள் போர் - இஸ்ரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.
1972 : அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக, அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.
1979 : சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய ரயில் ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
1999 : கொசோவோ போர் – செர்பியா - மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
2010 : ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர்.

1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025