2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 27

Janu   / 2024 ஜூன் 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1905 : ரஷ்ய - ஜப்பானியப் போரின் போது, பொத்தெம்கின் என்ற ரஷ்யப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.

1941 : ருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது.  இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1950 : கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.

1954 :  சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.

1954 : இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

1957 : டெக்சஸ்– லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில், 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1973 : உருகுவை அரசுத்தலைவர், உவான் மரியா போர்டபெரி நாடாளுமன்றத்தைக் கலைத்து, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.

1974 : அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.

1976 : ஏர் பிரான்ஸ் 139 (டெல் அவீவ் – ஏதென்ஸ் - பாரிஸ்) பாலத்தீன விடுதலை இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு, உகாண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1977 : சீபூத்தீ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 : முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1980 : பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம், நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற 81 பேரும் உயிரிழந்தனர்.

1981: சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது, 'மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை' வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக,, மா சே துங் மீது குற்றஞ்சாட்டியது.

1982 : கொலம்பியா விண்ணோடம் தனது கடைசி பயணத்தை முடித்துகொண்டது.

1991: சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.

1994 : ஜப்பானில் ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் மத்சுமோட்டோ நகரில் நச்சு வாயுவைக் கசியவிட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 660 பேர் காயமடைந்தனர்.

1998 : கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

2014 : ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X