2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 26

Janu   / 2024 ஜூன் 26 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1924 : ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு, 8 ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1936 : முதலாவது செயல்முறை ரீதியான, உலங்கு வானூர்தி (Focke-Wulf Fw 61) பறக்க விடப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போ - சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியதில், 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1945 : ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்டது.

1948 : முதலாவது, இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை, வில்லியம் ஷாக்லி பெற்றார்.

1960 : முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து, சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.

1960 : மடகஸ்கார் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1973 : கொசுமொசு-3 எம் ஏவுகலத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

1975 : இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

1976 : கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

1977 : எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிஸில் நடத்தினார்.

1978 : டொரான்டோ சென்ற ஏர் கனடா 189 விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில், இருவர் கொல்லப்பட்டனர்.

1995 : கட்டாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சேக் அமத் பின் கலீபா அல் தானி, அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.

1995 : அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

2015 : ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் படி, ஒரு-பால் இனத்தவரின் திருமணம் புரிவதற்கு உரிமை உள்ளதென தீர்ப்பு வழங்கியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X