2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 25

Janu   / 2024 ஜூன் 25 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

1935 : சோவியத் ஒன்றியத்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.

1940 : இரண்டாம் உலகப் போர் - பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜேர்மனியிடம் சரணடைந்தது.

1944 : இரண்டாம் உலகப் போர் - நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.

1950 : வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.

1975 : இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.

1975 :  போர்த்துகல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.

1983 : இலண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.

1991 :  குரோவாசியாவும் சுலோவீனியாவும் யுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தன.

1996 :  சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

1997 : ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் ரஷ்சிய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.

1998 :  வின்டோஸ் 98 முதற்பதிப்பு வெளியானது.

2007 :  கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.

2017 :  ஏமனில் 200,000 க்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X