Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூன் 24 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1913 : கிரேக்கமும் செர்பியாவும் பல்காரியாவுடனான தொடர்பைத் துண்டித்தன.
1932 : சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியை அடுத்து, மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 : 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1939 : சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.
1948 : பனிப்போர் - சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுகள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1950 : தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் - தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
1963 : ஐக்கிய இராச்சியம் சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சியை வழங்கியது.
1973 : அமெரிக்காவின் நியூ ஓர்லென்சில் தன்னினச் சேர்க்கையாளர்கள் கூடிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவைப்பு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
1997 : ஈழப்போர் – பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
2002 : தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் ரயில் விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.
2004 : நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக அறிவிக்கப்பட்டது.
2010 : ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றார்.
2007 : கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
2013 : இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தமது அதிகாரத்தை முறை தவறிப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
5 hours ago