Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 19 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
1903: பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக, பெனிட்டோ முசோலினி, பேர்ன் நகரில் கைதுசெய்யப்பட்டார்.
1910: அமெரிக்காவில் வொசிங்டனில், முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
1943: டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
1944: இரண்டாம் உலகப் போர் - அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.
1949: முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
1953: அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை, சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு, மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1961: குவைட், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1985: மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள், சல்வடோர் படையினராக வேடமிட்டு, சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
1987: எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1988: திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.
1990: ரஷ்யா - சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1991: ஹங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
2007: பாக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர். 218 பேர் காயமடைந்தனர்.
2012: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சு, இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில், அரசியல் தஞ்சமடைந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago