2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 16

Janu   / 2024 ஜூன் 16 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1903 : போர்ட் தானுந்து நிறுவனம் அமைக்கப்பட்டது.

1903 : ருவால் அமுன்சென் தனது முதலாவது வடமேற்குப் பெருவழியின் கிழக்கு - மேற்கு நோக்கிய கடற்பயணத்தை ஒஸ்லோவிலிருந்து ஆரம்பித்தார்.

1911 : ஐ.பி.எம் நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.

1911 : 772 கிராம் எடையுள்ள விண்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.

1940 : லிதுவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.

1944 : ஐக்கிய அமெரிக்கா, 14 வயதான ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.

1948 : மலாயன் கம்யூனிஸ் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து, அங்கு அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1955 : அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில், 364 பேர் கொல்லப்பட்டனர். 800 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1958 : 1956 ஹங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

1963 : வஸ்தோக் 6 - ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, உலகின் முதலாவது விண்வெளி வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

1976 : தென்னாபிரிக்காவில் ஸ்வெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காவற்றுறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

1997 : அல்சீரியாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 50 பேர் கொல்லப்பட்டனர்.

2010 : பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.

2012 : ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ் - 37 விண்ணூர்தி 469 நாட்கள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.

2012 : சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.

2013 : வட இந்திய மாநிலமான உத்தர கண்டத்தில் பெரும் வெள்ளம்,  நிலச்சரிவுகள் இடம்பெற்றதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X