2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 06

Janu   / 2024 ஜூன் 06 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1644: சீனாவில் மிங் வம்ச ஆட்சி முடிந்து குய்ங் வம்ச ஆட்சி ஆரம்பமாகியது. இது 1912 வரை தொடர்ந்தது.

1674: மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவாஜி மன்னராக முடிசூட்டப்பட்டார்.

1752: மொஸ்கோ நகரில் ஏற்பட்ட பாரிய தீயினால் 18000 வீடுகள் உட்பட பெரும் எண்ணிக்கையான கட்டிடங்கள் அழிந்தன.

1808: நெப்போலியன் போனபார்ட்டின் சகோதரரர் ஜோஸப் போனபார்ட் ஸ்பெய்ன் மன்னராக முடிசூடினார்.

1859: அவுஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து பிரிந்து குயின்ஸ்லாந்து மாநிலம் ஸ்தாபிக்கப்பட்டது.

1882: பம்பாய் நகரில் வீசிய சூறாவளியினால் சுமார் 100,000 பேர் பலி.

1944: 2 ஆம் உலக யுத்தத்தில், ஜேர்மனிக்கு எதிராக நேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 155,000 துருப்புகள் பிரான்ஸின் நோர்மண்டி கடற்கரையில் தரையிறங்கின.

1981: இந்தியாவில் ரயிலொன்று பாலத்திலிருந்து விலகி, பக்மதி நதியில் விழுந்ததால் 300 இற்கும் அதிகமானோர் பலி.

1993: மொங்கோலியாவில் முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .