2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 01

Janu   / 2024 ஜூன் 01 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1215: பெய்ஜிங் நகரம் செங்கிஸ் கான் தலைமையிலான மொங்கோலிய படையினால் கைப்பற்றப்பட்டது.

1485: ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைப்பற்றினான்.

1533: இங்கிலாந்தின் அரசியாக ஆன் போலெய்ன் முடிசூடினார்.

1605: மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.

1792: கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1796: டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1812: பிரிட்டன் மீது யுத்தப் பிரகடனம்செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மெடிசன் நாடாளுமன்றத்தை கோரினார்.

1831: ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.

1855: அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.

1869: மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.

1879: பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ - சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.

1910: ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென் முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.

1941: ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1946: ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1947: சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.

1959: நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X