Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 08 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1902 : நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
1906 : நியூயோர்க்கில் அட்சன் ஆற்றில் களிமண் தோண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.
1912 : ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1916 : முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை) - கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.
1926 : வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார்.
1926 : அப்துல்லா பின் அப்துல் அசீஸ் எஜாஸ் நாட்டின் மன்னராக முடி சூடி, அதன் பெயரை சவூதி அரேபியா என மாற்றினார்.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.
1946 : கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1956 : எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.
1961 : அல்சீரியாவில் சார்லசு டி கோலின் கொள்கைகளுக்கு பிரஞ்சு மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
1963 : ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசா வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
1964 : அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அமெரிக்காவில் வறுமைக்கு எதிரான போரை அறிவித்தார்.
1972 : சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கிஸ்தான் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ, வங்காளத் தலைவர் முசிப்புர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்தார்.
1973 : சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1977 : சோவியத் தலைநகர் மாஸ்கோவில் ஆர்மீனிய பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
1989 : இங்கிலாந்து கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.
1994 : ரஷ்யாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாள்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
1995 : தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.
1996 : சயீர் தலைநகர் கின்சாசாவில் அன்டனோவ் ஏஎன்-32 சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில், தரையில் 223 பேரும் விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் உயிரிழந்தனர்.
2003 : அமெரிக்காவில், வட கரொலைனாவில் ஏர் மிட்வெஸ்ட் வானூர்தி ஒன்று சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 21 பேரும் உயிரிழந்தனர்.
2003 : துருக்கியில் தியார்பக்கீர் விமான நிலையம் அருகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில், 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
2004 : குயீன் மேரி 2 உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி திறந்து வைத்தார்.
2008 : கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டி. எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
2009 : கோஸ்ட்டா ரிக்காவின் வடக்கே 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 15 பேர் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
25 minute ago
35 minute ago