2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 27

S. Shivany   / 2021 ஜனவரி 27 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1606 – வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, ஜனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.

1695 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார்.

1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1820 – மிகைல் லசாரொவ் தலைமையிலான உருசியக் குழு அந்தாட்டிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்தது.

1858 – இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி நிதிக்காக இலங்கையில் £2,771 நிதி சேகரிக்கப்பட்டது.

1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.

1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டன், டி. சி.யில் அமைக்கப்பட்டது.

1915 – ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.

1916 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சிய இராணுவத்திற்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் திட்டத்திற்கான சட்டமூலத்தை பிரித்தானிய அரசு நிறைவேற்றியது.

1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1924 – விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.

1938 – நியூயோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் 900-நாள் லெனின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

1951 – அணுகுண்டு சோதனை நெவாடாவில் ஆரம்பமானது.

1962 – 1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.

1967 – பனிப்போர்: விண்வெளியில் அறுவாயுதத் தடை, நிலா மற்றும் ஏனைய வானியல்சார் பொருட்களை அமைதி வழிக்கும் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றுக்கிடையே வாசிங்டன், டி. சி.யில் கையெழுத்திடப்பட்டது.

1967 – எட்வேர்ட் வைட் உட்பட அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தனர்.

1973 – வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.

1996 – ஜேர்மனி முதல்தடவையாக பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாளை நினைவு கூர்ந்தது.

1996 – நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

2002 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2011 – அரேபிய வசந்தம்: 2011 யேமனிய எதிர்ப்புப் போராட்டங்கள் சனாவில் ஆரம்பமாயின.

2013 – பிரேசிலின் சாண்டா மரியா நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 242 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .