Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1500 – எசுப்பானிய நாடுகாண் பயணி விசென்டே பின்சோன் பிரேசிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1531 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1564 – ஊலா நகரப் போரில் லித்துவேனியா உருசியாவை வென்றது.
1564 – இத்தாலியின் கத்தோலிக்க டிரெண்ட் பேரவை கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றிற்கிடையேயான அதிகாரபூர்வமான வேறுபாட்டை வரையறுத்தது.
1788 – ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது அவுஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
1837 – மிச்சிகன் அமெரிக்காவின் 26-ஆவது மாநிலமாக இணைந்தது.
1838 – அமெரிக்காவில் டென்னிசி முதலாவது மாநிலமாக மதுவிலக்கை அமுல்படுத்தியது.
1841 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
1905 – 3,106.75 கரட் (0.621350 கிகி) எடையுள்ள கலினன் என்ற உலகின் மிகப்பெரிய வைரம் தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1924 – சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1926 – ஜான் லோகி பைர்டு முதலாவது தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 சனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாளாக) அறிவித்தது. இது 17 ஆண்டுகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1934 – ஜேர்மனிக்கும், போலந்துக்கும் இடையே அமைதி உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: இத்தாலியின் உதவியுடன் பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு ஆதரவான படைகள் பார்செலோனாவைக் கைப்பற்றின.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.
1950 – இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.
1952 – பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் அழிந்தது.
1962 – ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.
1965 – இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
1980 – இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1986 – தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
1991 – சோமாலியாவில் சியாத் பாரியின் அரசு கலைக்கப்பட்டது.
2001 – குஜராத்தில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2015 – எசுப்பானியாவில் வான்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .