Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 ஜனவரி 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1348: இத்தாலியின் பிரியூலி பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டது.
1533: இங்கிலாந்தின் 8 ஆம் ஹென்றி மன்னன் தனது இரண்டாவது மனைவியாக, ஆன் போலினை திருமணம் இரகசியமாக திருமணம் செய்தார்.
1554: பிரேஸிலின் சா போலோ நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.
1755: மொஸ்கோ பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
1881: தோமஸ் அல்வா எடிஸனும் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல்லும் ணைந்து ஓரியன்டல் தொலைபேசி கம்பனியை உருவாக்கினர்.
1918: ரஷ்யாவிலிருந்து பிரிவதாக உக்ரேய்ன் சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1919: லீக் ஒவ் நேசன்ஸ் ஸ்தாபிக்கப்பட்டது.
1942: இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மீது தாய்லாந்து யுத்தப் பிரகடனம் செய்தது.
1961: முதல் தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டை ஜோன் எவ். கென்னடி நடத்தினார்.
1971: உகண்டாவின் ஜனாதிபதி மில்டன் ஒபோட்டை, சதிப்புரட்சி மூலம் வெளியேற்றிவிட்டு இடி அமீன் அதிகாரத்தை கைப்பற்றினார்.
1971: ஹிமாலாய பிரதேசம் இந்தியாவின் 18ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1981: மாவோ சேதுங்கின் விதவை மனைவி ஜியாங் கிங், சதிப்புரட்சிக்கு திட்டமிடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் ஜியாங் கிங்கிற்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ காரணங்களால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
1986: தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
1993: கொட்டியாரக்குடா கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் மூழ்கி இறந்தனர்.
1994: நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1995: இலங்கையின் ஜோசப் வாஸ் அடிகளார், பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
1998: கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
1999: கொலம்பியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1000 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.2002: விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.
2004: ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) செவ்வாயில் தரையிறங்கியது.
2005: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258பேர் கொல்லப்பட்டனர்.
2006: சூரிய குடும்பத்துக்கு வெளியே பால் வழியின் நடுவிற்கு அண்மையாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2009: முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை, விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.
2010: எத்தியோப்பிய பயணிகள் விமானமான்று மத்தியதரைக்கடலில் விழுந்ததால் 90 பேர் பலி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
41 minute ago
46 minute ago