Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 25 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
1515 – பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிஸ் முடிசூடினார்.
1533 – இங்கிலாந்தின் 8 ஆம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.
1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1765 – போக்லாந்து தீவுகளில் முதலாவது பிரித்தானியக் குடியேற்றம் எக்மண்ட் துறையில் ஆரம்பமானது.
1791 – பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர்.
1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.
1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு கூ25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
1918 – உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1924 – முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை முடிவுற்றது.
1947 – தோமஸ் கோல்ட்சிமித் என்பவர் முதலாவது இலத்திரனியல் விளையாட்டுக் கருவி, 'எதிர்மின் கதிர் குழாய் கேளிக்கைக் கருவியைக்' கண்டுபிடித்தார்.
1949 – முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன.
1949 – சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.
1949 – இசுரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.
1955 – சோவியத் ஒன்றியம் ஜேர்மன் மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.
1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1980 – அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் பாரத ரத்னா என்ற அதியுயர் விருது வழங்கப்பட்டது.
1981 – மா சே துங்கின் மனைவி சியாங் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
1993 – வர்ஜீனியாவில் அமெரிக்காவின் சிஐஏ தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.
1993 – கொட்டியாரக் குடாக் கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் மூழ்கி இறந்தனர்.
1994 – நாசாவின் 'கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1998 – கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2002 – விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.
2004 – ஆப்பர்சூனிட்டி தளவுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
2005 – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர்.
2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் ழுபுடுநு-2005-டீடுபு-390டுடி என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 – முல்லைத்தீவில் இராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.
2011 – எகிப்தியப் புரட்சியின் முதல் அலை ஆரம்பமானது.
2013 – வெனிசுவேலாவில் சிறைச்சாலைக் கலவரம் ஒன்றில் 50 பேர் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago