Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 23 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1368: சீனாவில் மிங் வம்ச ஆட்சி ஆரம்பமானது.
1556: உலக வரலாற்றில் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய பூகம்ப அனர்த்தம், சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் இடம்பெற்றது. இதில் 830,000 பேர் பலியாகினர்.
ரஷ்யா மற்றும் பிரஷ்யாவுக்கிடையில் போலந்து இரண்டாவது தடவையாக பிரிக்கப்பட்டது.
1849: எலிஸபெத் பிளக்வெல் என்பவர் நியூயோர்க்கின் ஜெனீவா மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரானார்.
1870: பூர்வீக அமெரிக்கர்கள் 173 பேர் வெள்ளையின அமெரிக்கர்களால் கொல்லப்பட்டனர்.
1899: எமிலியோ அகுய்னால்டோ பிலிப்பைன்ஸின் முதலாவது ஜனாதிபதியானார்.
1904: நோர்வேயின் அலஸன்ட் நகரம் தீக்கிரையானதால் 10000 பேர் வீடுகளை இழந்தனர்.
1943:பப்புவா நியூகினியாவை ஜப்பானிடமிருந்து அவுஸ்திரேலிய, அமெரிக்கப்ப படையினர் கைப்பற்றினர்.
1963: கினியா பிஸு சுதந்திரப் போராட்டம் ஆரம்பமாகியது.
1973: வியட்னாமில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அறிவித்தார்.
1997: மெடலின் அல்பிரைட், அமெரிக்காவின் முதலாவது பெண் இராஜாங்கச் செயலாளரானார்.
2002: அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ல், பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து கடத்தப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .