Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 ஜனவரி 21 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.
1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன.
1749 – இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754 இல் மீளக் கட்டப்பட்டது.
1774 – முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இஸ்லாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
1793 – பிரான்சின் 16ஆம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக, கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
1801 – ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மேலவையில் இருந்து பதவி விலகினார்.
1919 – புரட்சிகர ஐரிசு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு அயர்லாந்துக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1924 – சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார்.
1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: அவுஸ்;திரேலிய, பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் கடவுனு பொறந்துவ இலங்கையில் திரையிடப்பட்டது.
1948 – கியூபெக்கின் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டு முதற்தடவையாக அதன் தேசியப் பேரவையில் பறக்க விடப்பட்டது.
1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலசு, அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1960 – ஜமேக்காவில் அவியாங்கா விமானம் வீழ்ந்து தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.
1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
1960 – தென்னாப்பிரிக்காவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 435 தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டனர்.
1968 – பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று அமெரிக்காவின் தூலே வான் தளத்தில் மோதியதில், அப்பகுதி முழுவதும் அணுக் கதிர்வீச்சினால் பாதிப்படைந்தது.
1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
1976 – கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.
1995 – கொழும்பில் யோசப் வாசு அடிகளுக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார்.
2003 – 7.6 அளவு நிலநடுக்கம் மெக்சிக்கோவின் கொலிமா மாநிலத்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இசுபிரிட் தளவுலவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
2008 – அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசிப் பழங்குடி இறந்தார்.
2009 – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.
2009 – காசாக்கரையில் இருந்து இஸ்ரேல் அதிகாரபூர்வமாக வெளியேறியது.
2011 – அல்பேனியா, டிரானாவில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.
2017 – ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம், கூனேருவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 42 பேர் உயிரிழந்தனர், 68 பேர் காயமடைந்தனர்.
2017 – அமெரிக்க அரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் அமெரிக்காவின் 400 இற்கும் அதிகமான நகரங்களிலும், 160 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago