Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 20 , மு.ப. 01:00 - 0 - 58
1523 – இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1567 – போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின.
1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின
1783 – 1783 பாரிஸ் உடன்படிக்கை: பெரிய பிரித்தானியா, பிரான்சுடன் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தது. குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்தர் பிலிப் ஜாக்சன் துறையைத் தேர்ந்தெடுத்தார்.
1795 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
1816 – இலங்கையில் மோர்பசு வாந்திபேதி நோய் முதல் தடவையாக கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டது.
1839 – யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.
1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.
1887 – பேர்ள் துறைமுகத்தை கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அமெரிக்க செனட் அனுமதியளித்தது.
1906 – வாரன்ஸ் சர்க்கஸ் யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது வட்டரங்கு ஆகும்.
1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1921 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் கே5 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் உயிரிழந்தனர்.
1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்டு மன்னராக முடிசூடினார்.
1941 – ஜேர்மனிய அதிகாரி ஒருவர் உருமேனியா, புக்கரெஸ்ட் நகரில் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 125 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச வான்படையினர் பெர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மன் கிழக்கு புருசியாவில் இருந்து 1.8 மில்லியன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1945 – அங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
1972 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்து பாக்கித்தான் அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.
1981 – ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
1986 – அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் நாள் முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.
1990 – அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1991 – சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
1992 – பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்திராஸ்பூர்க் அருகே வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 96 பேரில் 85 பேர் உயிரிழந்தனர்.
1995 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்து சேர்ந்தார்.
2001 – பிலிப்பீன்சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்திராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.
2009 – பராக் ஒபாமா அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
2021- அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
5 hours ago