2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 18

Mithuna   / 2024 ஜனவரி 18 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1535 – எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் தலைநகர் லிமாவை நிர்மாணித்தார்.

1591 – சியாம் மன்னர் நரேசுவான் பர்மா இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1701 – புருசியாவின் மன்னாராக முதலாம் பிரெடெரிக் முடி சூடினார்.

1778 – அவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக் இதற்கு 'சான்ட்விச் தீவுகள்' எனப் பெயரிட்டார்.

1788 – இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி அவுஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.

1806 – இடச்சு கேப் குடியேற்றம் பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1824 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.

1871 – வடக்கு ஜேர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜேர்மன் மாநிலங்கள் ஆகியன ஜேர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்லெம் அதன் முதலாவது மன்னனான்.

1896 – எக்ஸ்ரே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.

1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.

1919 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்ஸ், வேர்சாயில் ஆரம்பமானது.

1929 – லியோன் திரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் போரைத் தொடங்கியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கிராக்கோவ் நகரம் செஞ்சேனையினால் விடுவிக்கப்பட்டது.

1960 – அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில், வானூர்தி ஒன்று வயல் நிலமொன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 50 பேரும் உயிரிழந்தனர்.

1960 – கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.

1969 – அமெரிக்க விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

1974 – இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து, யோம் கிப்பூர்ப் போர் முடிவுக்கு வந்தது.

1976 – லெபனான் கிறிஸ்தவர்களின் குடிப்படைகள் பெய்ரூட் கரந்தீனாவில் குறைந்தது 1,000 பேரைக் கொன்றனர்.

1977 – பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.

1977 – அவுஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.

1993 – அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் மார்ட்டின் லூதர் கிங் நாள் அதிகாரபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

1995 – 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்டன.

1997 – போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

2002 – சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

2003 – அவுஸ்திரேலியா தலைநகர் கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில், 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

2005 – உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2007 – மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் செருமனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .