Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 05, புதன்கிழமை
Editorial / 2025 ஜனவரி 13 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் உயிரிழந்தனர்.
1815 – கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
1830 – லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
1840 – அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.
1842 – முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார்.
1847 – கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
1849 – வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது.
1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.
1893 – அமெரிக்க கடற்படை, அவாய், ஒனலுலுவில் தரையிறங்கியது.
1908 – பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.
1910 – முதலாவது நேரலை வானொலி ஒலிபரப்பு நியூயார்க் நகரில் இடம்பெற்றது.
1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.
1930 – மிக்கி மவுஸ் சித்திரங்கள் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
1938 – இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
1939 – அவுஸ்;திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கி.மீற்றர் நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.
1942 – ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1950 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றுடன் மோதியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
1963 – டோகோவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சில்வானுசு ஒலிம்பியோ கொல்லப்பட்டார்.
1964 – கல்கத்தாவில் இந்து- முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1972 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமரும், அரசுத்தலைவரும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்கள்.
1982 – வாசிங்டனில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.
1985 – எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் உயிரிழந்தனர்.
1986 – தெற்கு யேமன், ஏடன் நகரில் ஒரு மாதமாக இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1991 – சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.
1992 – இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக சப்பான் மன்னிப்புக் கோரியது.
1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1998 – தற்பாலினர் வெறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்பிரெடோ ஓர்மண்டோ என்பவர் புனித பேதுரு சதுக்கத்தில் தீக்குளித்து இறந்தார்.
2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.
2006 – சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
2012 – இத்தாலியப் பயணிகள் கப்பல் கொஸ்டா கொன்கோர்டியா கடலில் மூழ்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
47 minute ago
1 hours ago