Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 12 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார்.
1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது.
1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
1866 – கொழும்பு மாநகரசபைக்கு முதல் தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
1872 – நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.
1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
1915 – அமெரிக்க காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
1918 – இங்கிலாந்து, இசுட்டாஃபர்ட்சயர் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 155 பேர் உயிரிழந்தனர்.
1918 – பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
1940 – இரண்டாம்;: உலகப் போர பின்லாந்தின் பல நகரங்களின் மீது உருசியா குண்டுகளை வீசியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.
1964 – சான்சிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
1967 – எம். ஆர். ராதா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
1970 – நைசீரிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1976 – பலத்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐ.நா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
1990 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சிறுபான்மையின ஆர்மீனியர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர், ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1991 – பாரசீக வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்கை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது.
1992 – மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
1998 – 19 ஐரோப்பிய நாடுகள் மாந்தர் படியாக்கம் தடை செய்யப்பட்டது.
2004 – உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலான 'குயீன் மேரி 2' தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
2005 – புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-ஐஐ என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
2006 – சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
2006 – 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை அருள் சின்னப்பரைச் சுட்டுக் காயப்படுத்திய மெகுமேது அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2010 – எயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100,000 பேர் வரை உயிரிழந்தனர். தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் பெரும் பகுதி அழிந்தது.
2015 – கமரூன், கொலபாட்டா நகரில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 143 போகோ அராம் போராளிகள் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
6 hours ago