Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 05, புதன்கிழமை
Janu / 2025 ஜனவரி 05 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
1846: அமெரிக்காவின் ஓரிகன் பிராந்தியத்தை பிரிட்டனுடன் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.
1854: சான் பிரான்ஸிஸ்கோவில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 300 பேர் பலி.
1896: வில்லியம் ரொஞ்ஜன் கதிர்வீச்சொன்றை கண்டுபிடித்ததாக ஆஸ்திரிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டது. இக்கதிர்வீச்சு எக்ஸ்றே கதிர் எனப் பிரபலமாகியது.
1909: பனாமாவின் சுதந்திரத்தை கொலம்பியா அங்கீகரித்தது.
1940: எவ்.எம். வானொலி முதல்தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.
1971: உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
1976: கம்போடியாவின் பெயர் 'ஜனநாயக கம்பூச்சியா' என மாற்றப்பட்டது.
1993: ஸ்கொட்லாந்துக்கு அருகில் எண்ணெய் தாங்கி கப்பலொன்று மூழ்கியதால் 84,700 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது.
2000: அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித்தலைவர் குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2005: ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
2007: கொழும்பிலிருந்து 36 கிலோமீற்றர் தொலைவில் நிட்டம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago