Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1715: ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் (72 வருடங்கள்) ஆட்சி செய்த பிரான்ஸின் 14 ஆம் லூயி மன்னர் காலமானார்.
1894: அமெரிக்காவில் இடம் பெற்ற காட்டுத்தீயினால் 400 இற்கம் அதிகமானோர் பலி.
1923: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகினர்.
1939: போலந்து மீது ஜேர்மனி படையெடுத்தது. இதன்மூலம் ஐரோப்பாவில் 2 ஆம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.
1969: லிபியாவில் மன்னர் இத்ரிஸ் வெளிநாடு சென்றிருந்தபோது கேணல் கடாபி தலைமையிலான இராணுவ படையொன்று புரட்சி நடத்தி, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் லிபியாவை குடியரசாக பிரகடனப்படுத்தியது.
1971: ஜோர்டான் மன்னர் ஹூஸைனை படுகொலை செய்ய பலஸ்தீன கெரில்லாக்களால் முயற்சிக்கப்பட்டது.
1983: தெரிய விமானமொன்றை சோவியத் யூனியன் சுட்டுவீழ்த்தியது. இதனால் விமானத்திலிருந்த 269 பேரும் பலியாகினர்.
1985: டைட்டானிக் கப்பல் சிதைவுகளை அமெரிக்க- பிரெஞ்சு ஆய்வுக்குழுவொன்று கண்டறிந்தது.
1991: சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய உஸ்பெகிஸ்தான், விடுதலையை அறிவித்தது.
2004: ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.
2007: மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
47 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025