Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1541: பிரெஞ்சு கடலோடியான ஜாக் கார்ட்டியர் கனடாவின் கியூபெக் நகரத்திற்கு அருகில் தரையிறங்கினார்.
1765: பர்மா – சியாமிய யுத்தம் ஆரம்பமாகியது.
1839: ஹொங்கொங்கை பிரிட்டன் கைப்பற்றியது. சீனாவுடனான யுத்தத்திற்கு தயாராகுவதற்கான தளமாக ஹொங்கொங்கை பிரிட்டன் பயன்படுத்தியது.
1914: ஜேர்மனிக்கு எதிராக ஜப்பான் போர் பிரகடனம் செய்தது.
1938: அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் இங்கிலாந்து வீரர் லென் ஹட்டன் 364 ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனை படைத்தார்.
1939: ஜேர்மனையும் சோவியத் யூனியனும் மோதல்தவிர்ப்பு உடன்படிக்கை செய்துகொண்டன.
1989: அவுஸ்திரேலியாவில் 1645 விமானிகள் ராஜினாமா.
1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக ஆர்மேனியா பிரகடனம் செய்தது.
1990: வளைகுடா யுத்தத்தை தவிர்ப்பதற்காக ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் மேற்குலக 'விருந்தினர்கள்' பலருடன் தொலைக்காட்சியில் தோன்றினார். அவர்கள் பணயக்கைதிகள் என மேற்குநாடுகளால் விமர்சிக்கப்பட்டது.
1990: தாம் ஒன்றிணையப்போவதா கிழக்கு ஜேர்மனியும்மேற்கு ஜேர்மனியும் அறிவித்தன.
1996: அமெரிக்கர்களுக்கு எதிராக ஒசாமா பின்லேடன் போர்ப் பிரகடனம்.
2000: பஹ்ரெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 143 பேர் பலி.
2011: லிபியாவில் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகள் பொப் அல் அஸீஸா நகரை கைபற்றியதன் பின்னர் கேணல் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
24 minute ago