Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1905 : சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.
1913 : ஹரி பிறியர்லி என்ற ஆங்கிலேயர் துருவேறா எஃகைக் கண்டுபிடித்தார்.
1918 : அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் முதல்தடவையாகப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
1920 : போலந்து – சோவியத் போர் வார்சாவாவில் ஆரம்பமாயிற்று. ஓகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் சோவியத் செஞ்சேனை தோற்றது.
1937 : இரண்டாம் சீன - ஜப்பானியப் போர் - சாங்காய் சமர் ஆரம்பமானது.
1954 : பாக்கிஸ்தான் வானொலி பாக்கிஸ்தான் நாட்டுப்பண்ணை முதல் தடவையாக ஒலிபரப்பியது.
1960 : மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1961 : பனிப்போர் - கிழக்கு ஜேர்மனி தனது குடிமக்கள் தப்பிச் செல்லாதவாறு பெர்லினின் கிழக்கு, மேற்கு எல்லையை மூடி பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.
1964 : ஐக்கிய இராச்சியத்தில் கடைசித் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1968 : கிரேக்க அரசுத்தலைவர் கியார்கியஸ் பப்படப்பவுலஸ் மீது ஏதென்ஸ் நகரில் கொலை முயற்சி இடம்பெற்றது.
1969 : அப்பல்லோ - 11 விண்வெளி வீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தார்கள்.
1978 : லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
2004 : 156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 : மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
2004 : 28 ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
2006 : புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல் - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில், 18 பேர் கொல்லப்பட்டனர். 54 பேர் காயமடைந்தனர்.
2015 : பகுதாது நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர். 212 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago