Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1914: முதலாம் உலகப் போர் - ஐக்கிய இராச்சியம் ஆத்திரியா - ஹங்கேரி மீது போர் தொடுத்தது.
1944 : நாட்சி ஜேர்மனிப் படைகள் போலந்தில் வோலா என்ற இடத்தில் நடத்திய படுகொலைகள் முடிவுக்கு வந்தன. 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
1950 : கொரியப் போர் - அமெரிக்க போர்க்கைதிகள் 75 பேர் வடகொரிய இராணுவத்தாரால் கொல்லப்பட்டனர்.
1952 : மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
1953 : கிரேக்கத்தில், யோனியத் தீவுகளில் 7.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 445 முதல் 800 பேர் வரை உயிரிழந்தனர்.
1953 : சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது ஐதரசன் குண்டு சோதனையை நடத்தியது.
1960 : எக்கோ ஐ என்ற நாசாவின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
1964 : இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
1976 : லெபனான் உள்நாட்டுப் போர் - தெல் அல்-சாத்தார் என்ற இடத்தில் 1,000 முதல் 3,500 வரையான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
1977 : இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1981 : ஐ.பி.எம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
1985 : ஜப்பானில் விமானம் ஒன்று ஒஸ்த்தாக்கா மலையில் மோதியதில் 520 பேர் உயிரிழந்தனர்.
1985 : ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ஆம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990 : அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் மிகப்பெரியதும், முழுமையானதுமான டைனொசோரஸ் என்னும் டைனோஸரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
1990 : வீரமுனைப் படுகொலைகள், 1990 – அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2000 : கூர்ஸ்க் என்ற உருசியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.
2005 : இலங்கைவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.
2005 : மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.
2005 : இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.
2006 : இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவரான கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2015 : சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர். 800 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago