2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 07

Janu   / 2024 ஓகஸ்ட் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.மு 322: மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1461: மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

1819: கொலம்பியாவின் "பொயாக்கா" என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

1832: இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1898: யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1906: கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

1927: ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

1933: ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 ஆசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942: இரண்டாம் உலகப் போர் - குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

1944: திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் ஈ) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

1945: இரண்டாம் உலகப் போர் - ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1955 - சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.

1960: ஐவரி கோஸ்ட் சுதந்திரம் பெற்றது.

1972: ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்குள் உகண்டாவிலிருந்து  வெளியேற வேண்டுமென அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்டார்.

1998: கென்யாவிலும் தான்ஸானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 212 பேர் பலியாகினர்.

1999: இரண்டாவது செச்னிய யுத்தம் ஆரம்பமாகியது.

2006: இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

2008: தெற்கு ஒசெஷியாவுக்கு எதிராக ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X