2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 25

Janu   / 2024 ஒக்டோபர் 25 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1760: பிரிட்டனில் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் ஆட்சிக்கு வந்தார்.

1920: பிரிட்டனில் 74 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பின்னர், சின்பெய்ன் அமைப்பின் டெரன்ஸ் மெக்ஸ்வினி மரணமடைந்தார்.

1945: நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபின், தாய்வான் நிர்வாகத்தை சீனக்குடியரசு கைப்பற்றியது.

1962: ஐ.நாவில் உகண்டா அங்கத்துவம் பெற்றது.

1962: நெல்சன் மண்டேலாவுக்கு 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1964: பிரிட்டனிடமிருந்து  ஸாம்பியா சுதந்திரம் பெற்றது. ஜனாதிபதியாக கவுண்டா பதவியேற்றார்.

1971: ஐ.நா. அமைப்பில் சீனக்குடியரசுக்குப் பதிலாக சீன மக்கள் குடியரசு அங்கத்துவம் பெற்றது.

1983: கிறனடாவில் இராணுவப் புரட்சியில் பிரதமர்  மௌரிஸ் பிஷப், கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்தன.

1984: எத்தியோப்பியாவில் 1984 ஆம் ஆண்டில் பட்டினியால் மரணமானதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அவசர உதவிகளை வழங்கின.

1991: 10 நாள் யுத்தத்தின்பின் ஸ்லோவினியாவிலிருந்து கடைசி யூகோஸ்லாவிய படைவீரர் வெளியேறினார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X