Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1911 : வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.
1912 : குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில் சேர்பியா வெற்றி பெற்றது.
1917 : போல்செவிக் செஞ்சேனையினர் ரஷ்யாவில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். ஒக்டோபர் புரட்சியின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.
1929 : கறுப்பு வியாழன் - நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.
1930 : பிரேஸிலில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. அதிபர் 'லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா' பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1935 : இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.
1943 : நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.
1945 : ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1946 : வி - 2 இல. 13 என்ற ஏவூர்தியில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து போமுயைப் புகைப்படம் எடுக்கப்பட்டது.
1954 : டுவைட் டி. ஐசனாவர் தெற்கு வியட்நாமுக்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.
1960 : சோவியத் ஒன்றியத்தின் பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1964 : வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.
1980 : போலந்து அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கிகரித்தது.
1994 : கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.
1998 : டீப் ஸ்பேஸ் 1 என்ற வால்வெள்ளிஃசிறுகோள் திட்டம் ஆரம்பமானது.
2003 : கான்கோர்டு விமானம் வணிக ரீதியான தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
2007 : சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago