Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 23 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
1906 : அல்பேர்ட்டோ சாண்டோஸ் - டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்கவிட்டார்.
1911 : முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.
1912 : முதலாம் பால்க்கன் போர் - செர்பியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.
1915 : நியூயோர்க் நகரில் 25,000 – 33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1917: லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
1929 : 1929 வால் வீதி வீழ்ச்சி - பங்குச்சந்தை விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியது.
1941 : இரண்டாம் உலகப் போர் - மாஸ்கோவை நாட்சி ஜேர்மனி கைப்பற்றுவதைத் தடுக்கும் பொருட்டு சோவியத் இராணுவத் தளபதி கியோர்கி சூக்கொவ் செஞ்சேனைக்குத் தலைமை ஏற்றார்.
1942 : இரண்டாம் உலகப் போர் - இரண்டாம் அல்-அலமைன் சண்டை - வடக்கு எகிப்தில், பிரித்தானியாவின் எட்டாவது இராணுப் படைகள் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையில் எகிப்தில் இருந்து அச்சு இராணுவத்தினரை வெளியேற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
1942 : அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த 12 பேரும் கொல்லப்பட்டனர்.
1944 : இரண்டாம் உலகப் போர் - வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.
1946 : ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.
1955 : பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago