Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1927 : நிக்கோலா தெஸ்லா ஒரு முனை மின்சாரம் உட்பட 6 புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.
1941 : இரண்டாம் உலகப் போர் - பிரெஞ்சு எதிர்ப்புக் குழுவின் உறுப்பினர் கை மோக்கே மற்றும் 29 பணயக்கைதிகள் நாட்சி ஜேர்மனிப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1943 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர். 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1947 : காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.
1957 : வியட்நாம் போர் - ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது.
1962 : கியூபா ஏவுகணை நெருக்கடி - கியூபாவில் சோவியத் அணுக்கரு ஆயுதங்கள் இருப்பதைத் தமது விமானப் படையினர் கண்டறித்துள்ளதாக அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.
1964 : பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது.
1964 : பிரெஞ்சு எழுத்தாளர் இழான் பவுல் சார்த்ரவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
1965 : இந்தியா-பாக்கிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
1966 : சோவியத் ஒன்றியம் லூனா 12 விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.
1968 : நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1970 : துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
1972 : வியட்நாம் போர் - ஓ சி மின் நகரில் என்றி கிசிஞ்சரும் தென் வியட்நாமியத் தலைவர் நியூவென் வான் தீயுவும் போர் நிறுத்தம் தொடர்பாக சந்தித்து உரையாடினர்.
1975 : சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.
1978 : இரண்டாம் அருள் சின்னப்பர் திருத்தந்தையாக பதவியேற்றார்.
1987 : ஈழப்போர் - யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்கு வானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
1999 : இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிரான்சில் பணியாற்றிய மோரிஸ் பேப்போன் என்ற இராணுவ அதிகாரிக்கு மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..
2001 :பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
2007 : எல்லாளன் நடவடிக்கை - இலங்கையின் அநுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
2008 : இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
2013 : ஆஸ்திரேலியத் தலைநகர ஆட்புலம் ஒருபால் திருமணத்தை அங்கிகரித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago