Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் அதன் பேசல் நகரை முற்றாக அழித்தது.
1860 – இரண்டாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்த்து.
1867 – ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
1898 – ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவைக் கைப்பற்றியது.
1908 – பெல்ஜியம் கொங்கோவைக் கைப்பற்றியது.
1912 – முதலாம் பால்க்கான் போர் ஆரம்பமாகியது.
1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லரிடமிருந்து ஜெர்மன் தேசிய இராணுவத்தை அமைப்பதற்கான கட்டளை பிறந்தது.
1944 – சோவியத் ஒன்றியம் செக்கொசுலவாக்கியாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.
1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அதிபர் பதவியிழந்தார்.
1851 – இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி முடிவுற்றது.
1954 – டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வீனஸ் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
1991 – நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.
2006 – ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago