Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 16 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மரீ அண்டொனெட் கழுத்து வெட்டி மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்.
1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.
1834 – லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.
1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான ஜெர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.
1942 – பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
1949 –கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1951 – பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1964 – மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
1975 – கிழக்குத் திமோரில் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனீசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1996 – குவாத்தமாலாவில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் பலியாகினர்.
1998 – சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினொச்சே லண்டனில் கைது செய்யப்பட்டார்.
2006 – ஈழப்போர்: இலங்கை, ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2006 – இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago