2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 06

Janu   / 2024 ஒக்டோபர் 06 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது.

1789 – பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வேர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து பாரிஸ் திரும்பினான்.
1795 – கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1870 – ரோம் இத்தாலியின் தலைநகரானது.
1889 – தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது அசையும் திரைப்படத்தைக் காண்பித்தார்.
1923 – முதலாம் உலகப் போர்: இஸ்தான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.
1927 – முதலாவது பேசும் படம் த ஜாஸ் சிங்கர் வெளியானது.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.
1976 – பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – எகிப்திய அதிபர் அன்வர் சாதாத் கொலை செய்யப்பட்டார்.
1987 – பிஜி குடியரசாகியது.
2002 – பிரெஞ்சு எண்ணெய்த் தாங்கி யேமனில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
2008 – அநுராதபுரம்: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – தமிழ் விக்கிப்பீடியாவில் 25,000 கட்டுரை இலக்கு எட்டப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .