2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஏப்ரல் 23

Janu   / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1660: சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1661: பிரிட்டனில் இரண்டாம் சார்ள்ஸ் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

1927: துருக்கி, சிறுவர் தினத்தை தேசிய விடுமுறைத் தினமாகக் கொண்டாடிய உலகின் முதல் நாடாகியது.

1940: அமெரிக்காவில் நாட்சேஸ் நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 198 பேர் பலியாகினர்.

1984: எயிட்ஸ் நோய்க்கு காரணமான வைரஸ் (HIV) கண்டுபிடிக்கப்பட்டது.

1990: இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான லலித் அத்துலத் முதலி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1990: நமீபியா 160 ஆவது அங்கத்துவ நாடாக ஐ.நாவில் இணைந்தது.

1993:  எதியோப்பியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக எரித்திரிய பிராந்திய மக்கள் வாக்களித்தனர்.

2005: முதலாவது யூடியூப் காணொளி "ஜாவெட்" என்பவரால் வெளியிடப்பட்டது.

2013: ஈராக்கில் அவீஜா நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 28 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.

2018: கனடா, தொராண்டோவில் வாகனம் ஒன்று நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X