2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஏப்ரல் 20

Janu   / 2024 ஏப்ரல் 20 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1792: ஆஸ்திரியாவுக்கு எதிராக  பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.

1889: ஜேர்மனின் முன்னாள் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் பிறந்தார்.

1926:  திரைப்படத்திற்கு ஒலியை இணைக்கக்கூடிய தொழில்நுட்பம் குறித்து அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் எலெக்ரிக் நிறுவனங்கள் அறிவித்தன.

1959: அடோல்வ் ஹிட்லரின் பிறந்த தினத்தையொட்டி ஜேர்மனியில் தேசிய விடுமுறைத் தினம் அறிவிக்கப்பட்டது.

1972: கோளாறுக்குள்ளான அப்பலோ 16 விண்கலம் பல மணித்தியால தாமதத்தின்பின் சந்திரனில் இறங்கியது.

1978: சோவியத் வான் பறப்பில் அனுமதியின்றி பறந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கொரிய விமானமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தில் இருவர் பலியாகினர். 97 107 பேர் உயிர் தப்பினர்.

1999: அமெரிக்காவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 24 பேர் காயமடைந்தனர்.

2008: ஜப்பானில் நடைபெறும் 'இன்டி ஜப்பான் 300' காரோட்டப் பந்தயத்தில் டெனிகா பட்ரிக் எனும் பெண் வெற்றி பெற்று இப்போட்டியில் வென்ற முதல் பெண் எனும் பெருமையைப் பெற்றார்.

2010: மெக்ஸிகோ வளைகுடாவில் பிரித்தானிய நிறுவனமொன்றுக்குச் சொந்தமான டீப்வாட்டர் ஹொரைஸன் எண்ணெய் அகழ்வுத்தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து; அத்திலாந்திக் சமுத்திரத்தில் பாரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X