Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1025: போலசுலாவ் சுரோப்றி, போலந்தின் முதலாவது மன்னராக முடிசூடினார்.
1797: நியுவியெட் என்ற இடத்தில், பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.
1835: அவுஸ்திரேலியாவில், மெல்பேர்ன் நகரம் அமைக்கப்பட்டது.
1864: ரஷ்யா - ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர், டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.
1880: மிசூரியில் வீசிய புயல் காற்றினால், 99 பேர் உயிரிழந்தனர்.
1897: கிரேக்கத்துக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.
1902: குவாத்தமாலாவில், 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1906: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், நகரத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1909: ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை, பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1912: கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலிலிருந்து உயிர்ப்பிழைத்த 705 பேர், நியூயோர்க் அடைந்தனர்.
1930: பிபிசி வானொலி, தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.
1942: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது, அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
1945: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1946: அனைத்துலக நீதிமன்றம், முதற்றடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.
1949: அயர்லாந்துக் குடியரசுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1954: ஜமால் அப்துல் நாசிர், எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1955: 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு, இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.
1958: இலங்கையில் பண்டா-செல்வா ஒப்பந்தம் முறிவடைந்தது.
1980: சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ரொபர்ட் முகாபே பிரதமரானார்.
1983: லெபனானில் பெய்ரூட் நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில், 63 பேர் கொல்லப்பட்டனர்.
1993: பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான், நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996: லெபனானில் ஐ.நா கட்டடம் ஒன்றின் மீது, இஸ்ரேலினால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007: பாக்தாத் நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago