Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1917 : வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாதிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்.
1922 : ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் பொதுச் செயலாளரானார்.
1933 : நாட்சி ஜேர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942 : இரண்டாம் உலகப் போர் - பட்டான் தீபகற்பத்தில் ஜப்பானியப் படை அமெரிக்க மற்றும் பிலிப்பீன்ஸ் படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
1948 : பனிப்போர் - அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் 16 நாடுகளுக்கு 5 பில்லியன் உதவித்தொகை வழங்கும் உத்தரவில் கையொப்பமிட்டார்.
1948 : தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1958 : பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் அவானா மீது தாக்குதல் தொடுத்தது.
1966 : சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973 : உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பவருக்கு மேற்கொண்டார்.
1974 : 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் உயிரிழந்தனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
1975 : அமெரிக்காவின் பாபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1981 : உலகின் முதலாவது பெயரத்தகு கணினி 'ஒஸ்போர்ன் 1' சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1982 : போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
1996 : ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.
1997 : அல்ஜீரியாவில் தாலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 : 2004 மத்ரித் தொடருந்து குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட இசுலாமியத் தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
2009 : நியூயார்க்கில் பிங்காம்ப்டன் என்ற இடத்தில் இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
2010 : ஆப்பிள் நிறுவனம் 1ஆவது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.
2016 : 214,488 வணிக நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்கள் வெளியிடப்பட்டது.
2017 : ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டுஇ பலர் காயமடைந்தனர்.
2018 : கலிபோர்னியா, சான் புரூனோ நகரிலுள்ள யூடியூப் தலைமையலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
26 minute ago
36 minute ago