Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 24 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார்.
1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை 15ஆம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார்.
1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார்.
1742 – 7ஆம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1835 – பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1857 – கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.
1862 – புக்கரெஸ்ட் உருமேனியாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
1887 – அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.
1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.
1916 – நடுவண் அரசின் வருமான வரி சட்டபூர்வமானது என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1918 – கிரெகோரியின் நாட்காட்டி உருசியாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
1924 – உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த பாங்காக் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.
1966 – ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் உயிரிழந்தனர்.
1968 – வியட்நாம் போர்: அவுஸ்திரேலியாவின் முதலாவது சிறப்புப் பணிப்பிரிவு வட வியட்நாம் இராணுவம், மற்றும் வியட்கொங் மீது தாக்குதலக்ளை ஆரம்பித்தது.
1972 – இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன சப்பானியப் படைவீரன் சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் மறைந்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.
1978 – கொசுமசு 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.
1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.
1986 – வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.
1990 – ஜப்பான் ஐட்டென் என்ற தனது முதலாவது நிலவுச்சலாகையை ஏவியது.
1996 – மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.
2006 – இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
2007 – சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.
2009 – இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து காணாமல் போனார்.
2009 – பிரான்சு, பொர்தோ அருகில் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்,
2011 – மாஸ்கோவின் தமதேதவோ வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
51 minute ago
51 minute ago