Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1903 : பனாமா கால்வாயை அமைக்கும் பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை கொலம்பிய மேலவை பின்னர் நிராகரித்தது.
1926 : கோஸ்ட்டா ரிக்காவில் ரயிலொன்று பால்ததிலிருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காயமடைந்தனர்.
1931 : இந்தியாவின் முதலாவது பேசும் படம், ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.
1939 : சிலோவாக்கியா ஜேர்மனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.
1942 : அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பென்சிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
1943 : இரண்டாம் உலகப் போர் - கிராக்கோவ் வதைமுகாம் மூடப்பட்டது.
1951 : கொரியப் போர் - இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
1978 : இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.
1979 : சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில், 44 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.
1980 : போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாவுக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.
1982 : தென்னாப்பிரிக்க அரசு இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையகம் மீது குண்டு வீசியது.
1994 : லினக்ஸ் கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.
1995 : ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாகப் பயணித்தார்.
1998 : தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.
2006 : சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
2008 : திபெத்தின் லாசா நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
47 minute ago
1 hours ago