Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 மார்ச் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1492: ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1814: நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர்.
1822: ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது.
1831: யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
1842: அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
1863:டென்மார்க் இளவரசர் வில்லயிம் ஜோர்ஜ் கிறீஸ் நாட்டின் மன்னரானார்.
1867: அலாஸ்கா பிராந்தியம் ரஷ்யாவிடமிருந்து 72 லட்சம் டொலர்களுக்கு அமெரிக்காவினால் வாங்கப்பட்டது.
1945: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஆஸ்திரியா மீது சோவியத் யூனியன் படையெடுத்தது.
1965: வியட்நாமில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 22 பேர் பலி. 183 பேர் காயம்.
1981: வாஷிங்டன் டி.சி. நகரில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மீது ஜோன் ஹிங்க்லே என்பவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதால் ரீகனின் நெஞ்சில் காயம் ஏற்பட்டது.
2006: ஐக்கிய இராச்சியத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம், சட்டமாக்கப்பட்டது.
2009: பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அமைந்துள்ள மனவன் பொலிஸ் கல்லூரி மீது துப்பாக்கிதாரிகள் 12பேரால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago