Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 25 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
1911 : நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1918 : பெலருஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1931 : இஸ்க்காட்பரோ சிறுவர்கள் அலபாமாவில் கைது செய்யப்பட்டு வன்கலவிக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
1941 : இரண்டாம் உலகப் போர் - அச்சு அணி நாடுகள் அமைப்பில் யுகோஸ்லாவியா இணைந்தது.
1947 : அமெரிக்காவில் இலினோய் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 111 பேர் உயிரிழந்தனர்.
1949 : எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
1953 : ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
1954 : முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்.சி.ஏ நிறுவனம் வெளியிட்டது.
1954 : இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
1957 : மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
1965 : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் தமது 4 நாள் 50 மைல் எதிர்ப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
1971 : வங்காளதேச விடுதலைப் போர் - பாக்கிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1975 : சவூதி அரேபிய மன்னர் பைசால் தனது உளப் பிறழ்ச்சி கொண்ட மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1988 : செக்கோசிலோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1992 : சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10 மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.
1996 : மாட்டுப் பித்தநோய் காரணமாக பிரித்தானிய மாட்டிறைச்சி மற்றும் அதன் துணைப் பொருள்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
29 minute ago
43 minute ago