Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 09 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
1566 – ஸ்கொட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.
1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார்.
1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.
1841 – தாம் கொண்டுவரப்பட்ட கப்பலைக் கைப்பற்றி வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் சட்ட விரோதமாக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1842 – கலிபோர்னியா தங்க வேட்டைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கின.
1896 – ஆத்வா நகர சமரில் இத்தாலி தோல்வியடைந்ததை அடுத்து, இத்தாலியின் பிரதமர் பிரான்சிசுக்கோ கிருசுப்பி பதவி துறந்தார்.
1916 – மெக்சிக்கோ புரட்சி: ஏறத்தாழ 500 மெக்சிக்கர்கள் எல்லை நகரான நியூ மெக்சிக்கோவின் கொலம்பசு நகரைத் தாக்கினர்.
1923 – விளாதிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி ஜப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஐந்து-நாள் சமரைத் தொடங்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவ வானூர்திகள் எசுத்தோனியா தலைநகர் தாலினைத் தாக்கின.
1945 – இரண்டாம் உலகப் போர்: இந்தோ சீனாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சப்பானியப் படையினர் பிரான்சியரை ஆட்சியில் இருந்து அகற்றியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 33 பேர் உயிரிழந்தனர்.
1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1957 – அலாஸ்காவில் அலூசியன் தீவுகளில் ஏற்பட்ட 8.6 அளவு நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
1961 – சோவியத்தின் ஸ்புட்னிக் 9 விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் சோவியத் ஒன்றியம் மனித விண்வெளிப்பறப்புக்கு தயாரென அறிவித்தது.
1967 – அமெரிக்காவின் இரு விமானங்கள் ஒகையோ மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.
1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 சிறுவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.
1977 – இஸ்லாமியத் தீவிரவாதிகள் வாசிங்டன், டி. சி.யில் மூன்று கட்டிடங்களை 39-மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
1997 – சீனா, மங்கோலியா, கிழக்கு சைபீரிய வானியலாளர்கள் பகல் நேரத்தில் ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்ணுற்றனர்.
2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
2011 – டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.
2012 – காசாக்கரையில் இருந்து 130 ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago