S. Shivany / 2021 மார்ச் 03 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
1585 – அந்திரேயா பலாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது.
1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
1845 – புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1857 – இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.
1861 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.
1873 – அஞ்சல் மூலம் 'ஆபாசமான, அல்லது கவர்ச்சியான' நூல்களை அனுப்புவது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1878 – உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை அடைந்தது. அடுத்த சில மாதங்களில் பெர்லினில் நடந்த ஆறு நாடுகளின் மாநாட்டில் இவ்வுரிமை மறுக்கப்பட்டு, பல்கேரியா உதுமானியப் பேரரசின் குத்தகை நாடு என அறிவிக்கப்பட்டது.
1904 – எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன் முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம் உருவாக்கினார்.
1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார்.
1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
1918 – முதலாம் உலகப் போரில் உருசியாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர செருமனி, ஆஸ்திரியா, உருசியா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.
1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
1924 – உதுமானியப் பேரரசின் கலிபா இரண்டாம் அப்துல்மெசித் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து 14-ஆம் நூற்றாண்டின் பழமை வாய்ந்த இசுலாமியக் கலீபகம் முடிவுக்கு வந்தது.
1931 – ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.
1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939 – மும்பாயில் மகாத்மா காந்தி பிரித்தானியருக்கு எதிராக உண்ணா நோன்பை ஆரம்பித்தார்.
1940 – சுவீடனில் இடதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியின் செய்திப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் சப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க, பிலிப்பீனியப் படையினர் மணிலாவை மீண்டும் கைப்பற்றினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படையினர் நெதர்லாந்தின் டென் ஹாக் நகர் மீது தவறுதலாகக் குண்டுகளை வீசியதில் 511 பேர் உயிரிழந்தனர்.
1953 – கனடிய பசிபிக் ஏர் லைன்சு விமானம் ஒன்று கராச்சியில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
1958 – ஈராக்கின் பிரதமராக நூரி-அல்-சயீது எட்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.
1974 – பாரிசு அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் உயிரிழந்தனர்.
1985 – சிலியில் வால்பரைசோ என்ற பகுதியில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.
1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான 'அவுஸ்திரேலியா சட்டம் 1986' நடைமுறைக்கு வந்தது.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74மூ மக்களும் எஸ்தோனியாவின் 83மூ மக்களும் வாக்களித்தனர்.
2005 – இசுட்டீவ் பொசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் எதுவும் மீள நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார்.
2013 – கராச்சியில் சியா முசுலிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025