Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1534 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.
1626 – எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார்.
1640 – இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.
1659 – கோபனாவன் மீது சுவீடன் படைகள் நடத்திய தாக்குதல் பெரும் இழப்புடன் முறியடிக்கப்பட்டது.
1790 – அடிமை முறையை ஒழிக்குமாறு நண்பர்களின் சமய சமூகம் அமெரிக்கக் காங்கிரசில் முறையிட்டது.
1794 – அமெரிக்க மேலவையின் முதலாவது அமர்வு பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
1802 – சின்ன மருது மகன் துரைச்சாமி உட்பட 73 பேர் மலாயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்.
1823 – மோல்டாவில் வல்லெட்டா நகரில் கிறிஸ்;தவக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட விழா நெரிசலில் 110 மாணவர்கள் உயிரிழந்தனர்.
1826 – இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
1855 – காசா ஐலு எத்தியோப்பியாவின் பேரரசராக மூன்றாம் தெவோதிரசு என்ற பெயரில் முடிசூடினார்.
1856 – அவத் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது. அவத் மன்னர் வாஜித் அலி சா கைதுசெய்யப்பட்டு பின்னர் கொல்கத்தாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
1858 – பெர்னதெத் சுபீரு லூர்து அன்னையை முதற்தடவையாகக் கண்ணுற்ற நிகழ்வு பிரான்சின் லூர்து நகரில் இடம்பெற்றது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமைகள் விவகாரத்தில் எந்தவொரு மாநிலத்திலும் நேரடியாகத் தலையிடுவதில்லை என அமெரிக்கக் கீழவை ஏகமனதாக முடிவு செய்தது.
1873 – எசுப்பானிய மன்னர் முதலாம் அமேதியோ முடி துறந்தார்.
1929 – வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான உடன்பாட்டை இத்தாலியும் திரு ஆட்சிப்பீடமும் எட்டின.
1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
1938 – பிபிசி தொலைக்காட்சி தனது முதலாவது அறிபுனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஐரோப்பாவில் நேச நாடுகளின் இராணுவத்திற்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953 – சோவியத் ஒன்றியம் இஸ்ரேல் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது.
1959 – தெற்கு அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு (பின்னர் தெற்கு யேமன்) ஐக்கிய இராச்சியத்தின் காப்பு நாடாக உருவாக்கப்பட்டது.
1960 – சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1964 – கிரேக்கரும் துருக்கியரும் சைப்பிரசின் லிமாசோல் நகரில் போரிட்டனர்.
1971 – பனிப்போர்: பன்னாட்டுக் கடற்பரப்பில் அணுக்கரு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன.
1973 – வியட்நாம் போர்: வியட்நாமில் இருந்து முதல் தொகுதி அமெரிக்கப் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
1978 – அரிசுட்டாட்டில், வில்லியம் சேக்சுபியர், சார்லஸ் டிக்கின்ஸ் ஆகியோரின் ஆக்கங்களுக்கான தடையை சீனா தளர்த்தியது.
1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா கேப் டவுன் விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றார்.
1996 – குமாரபுரம் படுகொலைகள்: இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
1999 – புளுட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தை தாண்டிச் சென்றது. இவ்வாறான நிகழ்வு மீண்டும் 228 ஆண்டுகளின் பின்னரே நிகழும் என எதிர்வு கூறப்படுகிறது.
2008 – கிழக்குத் திமோர் கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலில் அரசுத்தலைவர் ஒசே ரமோசு-ஓர்ட்டா படுகாயமடைந்தார். கிளர்ச்சித் தலைவர் அல்பிரடோ ரெய்னார்டோ கொல்லப்பட்டார்.
2011 – அரேபிய வசந்தம்: ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக் கோரி எகிப்தியப் புரட்சி ஆரம்பமானது.
2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மூப்பு காரணமாக 2013 பெப்ரவரி 28 இல் பணி துறப்பார் என வத்திக்கான் அறிவித்தது.
2014 – அல்சீரியாவின் கிழக்கே சரக்கு விமானம் ஒன்று மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.
2017 – வட கொரியா யப்பான் கடல் மேலாக ஏவுகணையை ஏவிப் பரிசோதித்தது.
2018 – சரதோவ் எயர்லைன்சு விமானம் 703 மாஸ்கோ அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 71 பேரும் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago
31 minute ago
4 hours ago