Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
S. Shivany / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின.
1812 – அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
1819 – சேர் இஸ்டாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.
1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
1904 – அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம், பால்ட்டிமோரில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.
1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அன்சியோ நகரில், செருமனியப் படைகள் கூட்டுப் படைகளின் சிங்கிள் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தன.
1951 – கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்.
1967 – அவுஸ்திரேலியா, தாசுமேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.
1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.
1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார்.
1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
1991 – எயிட்டியில் முதல் முறையாக மக்களாட்சி முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார்.
1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
2005 – விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
2009 – அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர்.
2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.
2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
2 hours ago